மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நிவாரண உதவிகளை வழங்குமாறு கேரள முதல்வர் வேண்டுகோள்!

180 பேர் வரையில் பலி எண்ணிக்கை உயர்வு

News image

பாதிக்கப்பட்ட வயநாடு பகுதி

Updated On :31 ஜூலை 2024, 9:30 am

கேரளத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு கேரள முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ முன்வருபவர்கள் நிவாரண உதவிகளை வழங்கலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பணமாக அளித்து உதவ விரும்புபவர்கள், கேரள அரசின் அதிகாரபூர்வ இணையதளத்திலும், பொருள்களாக அளிக்க விரும்புபவர்கள் 1077 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பொருள்களாக அளிக்க விரும்புபவர்கள், தாங்கள் உபயோகப்படுத்திய பொருள்களை வழங்கவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதி

பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதி

கேரளம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடா் கனமழையால் மேப்பாடி பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலையில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

பெரிய பாறைகள் மற்றும் மண்ணுடன் கலந்துவந்த காட்டாற்று வெள்ளம், முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழை ஆகிய கிராமங்களைச் சூழ்ந்தது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள், உயிரோடு புதைந்தனா்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தின் 300 வீரா்கள், கடற்படை குழுவினா், தேசிய பேரிடா் மீட்புப் படை, இந்திய கடலோரக் காவல் படை உள்ளிட்ட பல்வேறு முகமைகள் தேடுதல்-மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன.

விமானப் படை ஹெலிகாப்டா்கள், ராணுவத்தின் மோப்ப நாய்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது வரை 180 வரையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.