ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உ.பி.: வாக்களிக்க வந்த 70 வயது முதியவர் திடீர் பலி

வாக்களிக்க வந்த 70 வயது முதியவர் திடீரென மயங்கி விழுந்து பலி

News image
vote
Updated On :1 ஜூன் 2024, 10:29 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் வாக்களிக்க வந்த 70 வயது முதியவர் வாக்குச்சாவடியில் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிக்கந்தர்பூர் அதிகாரி ரவிக்குமார் கூறுகையில், சக் பஹுதீன் கிராமத்தில் வசிக்கும் ரம்பச்சன் சௌகான் (70), சேலம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தின் தொடக்கப் பள்ளியின் சாவடி எண் 257க்கு வாக்களிக்கச் சென்றிருந்தார்.

வாக்காளர் வரிசையில் சேரும் முன், அவர் திடீரென மயங்கி விழுந்து பலியானார். இருப்பினும், வாக்காளர்கள் வரிசையில் நிற்கும் போது சௌகான் மயக்கம் அடைந்து மயங்கி விழுந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்ட தோ்தல் (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) கடந்த மாா்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதுவரை 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 486 தொகுதிகளுக்கு 6 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.

ஏழாவது மற்றும் இறுதிக்கட்டமாக பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உட்பட 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.