நாடாளுமன்றத்தின் 543 மக்களவை தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெல்லப்போவது யார்? என்பதை முன்கூட்டியே கணிக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.
ரிபப்ளிக் டிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி,
பாஜக தலைமையிலான ’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 353 - 368 இடங்கள்,
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ --> 118 - 133 இடங்கள்,
இதர கட்சிகள் --> 43 - 48 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம்:
அதிக எண்ணிக்கையிலான மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (55.6% வாக்குகள்) 69 - 74 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ (33.5% வாக்குகள்) 6 - 11 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் (8.2% வாக்குகள்) ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 69 - 74 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 6 - 11 இடங்கள்
இதர கட்சிகள் --> 0
மகாராஷ்டிரம்:
மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 30 - 36 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 13 - 19 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 30 - 36 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 13 -19 இடங்கள்
இதர கட்சிகள் --> 0
தமிழ்நாடு:
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 0 - 3 இடங்களிலும் (31.9% வாக்குகள்), காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 35 - 38 இடங்களிலும் (50.4% வாக்குகள்), அதிமுக கூட்டணி 0 - 1 இடங்களிலும் (16.1% வாக்குகள்), வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 0 - 3 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 35 - 38 இடங்கள்
அதிமுக கூட்டணி --> 0 - 1 இடம்
இதர கட்சிகள் --> 0 இடம்
கர்நாடகம்:
கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 21 இடங்களிலும் (52% வாக்குகள்), காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 7 இடங்களிலும் (42.2% வாக்குகள்) வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் (6.8% வாக்குகள்) ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 21 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 7 இடங்கள்
இதர கட்சிகள் --> 0
தெலங்கானா:
தெலங்கானாவில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 6- 9 இடங்களிலும், ஆந்திரத்தில் ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 5- 8 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி 0 - 3 இடங்களிலும், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் 0 -1 இடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 6 - 9 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 5 - 8 இடங்கள்
பிஆர்எஸ் --> 0 - 3 இடங்கள்
ஏஐஎம்ஐஎம் --> 0 -1 இடம்
ஆந்திர பிரதேசம் :
ஆந்திர பிரதேசத்தில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 19 - 22 இடங்களிலும், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் 3 - 6 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 19 - 22 இடங்கள்ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் --> 3 - 6 இடங்கள்
இதர கட்சிகள் --> 0
ராஜஸ்தான்:
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 22 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 3 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 22 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 3 இடங்கள்
இதர கட்சிகள் --> 0
ஒடிஸா:
ஒடிஸாவில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 9 - 12 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 1 இடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஜு ஜனதா தளம் 7 - 10 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 9 - 12 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 1 இடங்கள்
பிஜு ஜனதா தளம் --> 7 - 10 இடங்கள்
பஞ்சாப்:
பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 10 இடங்களிலும், இதர கட்சிகள் ஒரு இடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 2 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 10 இடங்கள்
இதர கட்சிகள் --> 1
மேற்கு வங்கம்:
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 21 - 25 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 1 இடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் 16- 20 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 21 - 25 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 1 இடங்கள்
திரிணமூல் காங்கிரஸ் --> 16 - 20 இடங்கள்
தில்லி:
தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 5 - 7 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 0 - 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 5 - 7 இடங்கள்
’இந்தியா கூட்டணி(ஆம் ஆத்மி - காங்கிரஸ்)’ --> 0 - 2 இடங்கள்
இதர கட்சிகள் --> 0
பிகார்:
பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 32 - 37 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 2 - 7 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் வெற்றி பெற வாய்ப்பு.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ -->32 - 37 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ -->2 - 7இடங்கள்
இதர கட்சிகள் --> 0 - 1 இடம்
மத்திய பிரதேசம்:
மத்திய பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 28 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 1 இடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 28 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 1 இடம்
இதர கட்சிகள் --> 0
கோவா:
கோவாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 1 இடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 2 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 1 இடங்கள்
இதர கட்சிகள் --> 0
அஸ்ஸாம்:
அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 10 - 12 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 0 - 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் 0 - 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 10 - 12 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 0 - 2 இடங்கள்
இதர கட்சிகள் --> 0 - 2 இடங்கள்
ஹிமாசல பிரதேசம்:
ஹிமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3 - 4 இடங்களிலும் (58.8% வாக்குகள்), காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 0 - 1 இடத்திலும் (38.6% வாக்குகள்) வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் (2.6% வாக்குகள்) ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 3 - 4 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 0 - 1 இடங்கள்
இதர கட்சிகள் --> 0
கேரளம்:
கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 17 இடங்களிலும், கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 3 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
’ஐக்கிய ஜனநாயக முன்னணி(காங்கிரஸ்)’ --> 17 இடங்கள்
’இடதுசாரி ஜனநாயக முன்னணி(கம்யூனிஸ்ட்)’ --> 3 இடங்கள்
தேசிய ஜனநாயகக் கூட்டணி(பாஜக) --> 0
திரிபுரா:
திரிபுராவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 2 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 0 இடங்கள்
இதர கட்சிகள் --> 0 இடங்கள்
அருணாசல பிரதேசம்:
அருணாசல பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 2 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 0 இடங்கள்
இதர கட்சிகள் --> 0 இடங்கள்
மணிப்பூர்:
மணிப்பூரில் மொத்தமுள்ள 2 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ ஒரு இடத்திலும், இதர கட்சிகள் ஒரு இடத்திலும், வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 0 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 1 இடங்கள்
இதர கட்சிகள் --> 1 இடங்கள்
குஜராத்:
குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 24 - 26 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 0 - 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 24 - 26 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 0 - 2 இடங்கள்
இதர கட்சிகள் --> 0
ஜார்க்கண்ட்:
ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 10 - 12 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 2 - 4 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 29 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 19 இடங்கள்
இதர கட்சிகள் --> 0
உத்தராகண்ட்:
உத்தராகண்ட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 - 4 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 4 - 5 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 2 - 4 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 4 - 5 இடங்கள்
இதர கட்சிகள் --> 0
சத்தீஸ்கர்:
சத்தீஸ்கரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 9 - 11 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 0 - 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 9 - 11 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 0 - 2 இடங்கள்
இதர கட்சிகள் --> 0
மிஸோரம்:
மிஸோரமில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 1 இடத்திலும். ஸோரம் மக்கள் இயக்கம் 1 இடத்திலும். வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 0 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 1 இடம்
இதர கட்சிகள் --> 1 இடம்
நாகாலாந்து:
நாகாலாந்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு இடத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 1 இடம்
’இந்தியா கூட்டணி’ --> 0
இதர கட்சிகள் --> 0
ஹரியாணா:
ஹரியாணாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 8 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
’தேசிய ஜனநாயகக் கூட்டணி’ --> 8 இடங்கள்
’இந்தியா கூட்டணி’ --> 2 இடங்கள்
இதர கட்சிகள் --> 0
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



