ஆம் ஆத்மி அலுவலகத்திலிருந்து திகார் சிறைக்கு காரில் புறப்பட்டுச் சென்ற அரவிந்த் கேஜரிவால்
ஆம் ஆத்மி அலுவலகத்திலிருந்து திகார் சிறைக்கு காரில் புறப்பட்டுச் சென்ற அரவிந்த் கேஜரிவால்

மீண்டும் சிறைக்குச் சென்றார் கேஜரிவால்!

ஜூன் 1 வரை உச்சநீதிமன்றம் வழங்கியிருந்த இடைக்கால ஜாமீன் முடிந்த நிலையில், இன்று திகார் சிறையில் சரணடைந்தார் கேஜரிவால்.
Published on

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திகார் சிறையில் இன்று (ஜுன் 2) மலை சரணடைந்தார்.

அவரின் மனைவி சுனிதா கேஜரிவால், மகள் ஹர்ஷிதா கேஜரிவால் ஆகியோர் ஆம் ஆத்மி அலுவலகத்திலிருந்ந்து திகார் சிறைக்கு அவருடன் காரில் சென்றனர்.

மக்களவைத் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்பதற்காக கேஜரிவாலுக்கு ஜூன் 1-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் வழங்கியிருந்த இடைக்கால ஜாமீன் முடிந்த நிலையில், இன்று அவர் திகார் சிறையில் சரணடைந்தார்.

திகார் சிறை வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள்
திகார் சிறை வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள்

திகார் சிறையில் சரணடைவதற்கு முன்பு தனது வீட்டில் பெற்றோரிடம் ஆசி பெற்ர கேஜரிவால், ராஜ்காட் மைதானத்தில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

கேஜரிவாலுடன் அவரின் மனைவி சுனிதா கேஜரிவால், தில்லி அமைச்சர்கள் அதிஷி, கைலாஷ் கெலாட், செளரப் பரத்வாஜ், மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், சந்தீப் பதாக், துர்கேஷ் பதாக், ராக்கி பிர்லா, ரீணா குப்தா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஆம் ஆத்மி அலுவலகத்திலிருந்து திகார் சிறைக்கு காரில் புறப்பட்டுச் சென்ற அரவிந்த் கேஜரிவால்
சிக்கிமில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார் பிரேம்சிங் தமாங்!

பின்னர் ஆம் ஆத்மி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் பங்கேற்று உரையாற்றினார்.

உச்சநீதிமன்றம் வழங்கிய 21 நாள் ஜாமீனில் ஒரு நிமிடத்தைக் கூட வீணாகக் கழிக்கவில்லை என்றும், ஆம் ஆத்மிக்காக மட்டுமின்றி கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் பிரசாரம் மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

தில்லி மட்டுமின்றி, மும்பை, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் என பல மாநிலங்களுக்குச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும், ஆம் ஆத்மி முக்கியமல்ல, நாட்டின் நலனே முக்கியம், அதனால் ஓய்வெடுக்காமல் 21 நாளும் உழைத்ததாகக் கூறினார்.

தேர்தல் கருத்துக்கணிப்பில் பாஜக பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது போன்ற கருத்துகளை நம்ப வேண்டாம் என்றும், அவை நம்மை அழுத்ததிற்கு உட்படுத்தும் நோக்கத்தில் பாஜகவால் மேற்கொள்ளப்படும் விளையாட்டு என்றும் கேஜரிவால் பேசினார்.

பின்னர் ஆம் ஆத்மி அலுவலகத்திலிருந்து கார் மூலம் திகார் சிறைக்கு அரவிந்த் கேஜரிவால் புறப்பட்டுச் சென்றார். திகார் சிறை வரை அவருடன் குடும்பத்தினர் அமைச்சர்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com