
வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும் நிலையில் அரசு ஊழியர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சில கோரிக்கை வைத்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், ஜுன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினத்தில் அரசு ஊழியர்கள் யாருக்காகவும் அஞ்சக்கூடாது. ஜனநாயகத்துக்கு எதிரான செயல்களுக்கு வளைந்துகொடுக்கக்கூடாது.
தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய ஆயுதப் படைக்கும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காவல் துறையினருக்கும், அரசு ஊழியர்களுக்கும் , மாவட்ட ஆட்சியர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாட்டின் முதல் உள் துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல், அரசு ஊழியர்கள் இந்தியாவின் எஃகு சட்டகம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு அரசு ஊழியர்களுக்கு சுதந்திரமாக செயல்படும் நிறுவனம் அவசியமானது. தங்கள் கடமைகளை உண்மையுடனும் மனசாட்சியுடனும் நிறைவேற்றுவார்கள் மற்றும் அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்குட்பட்டு அனைத்து வகையான மக்களுக்கும் பயம் அல்லது தயவு, பாசம் அல்லது தனிப்பட்ட விருப்புகளுக்கு அப்பாற்பட்டு கடமைகைகளைச் செய்பவர்கள்.
மேல்தட்டு முதல் கீழ்த்தட்டு வரை அனைத்து படிநிலைகளிலும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையின்படி
ஆளும் கட்சியிடமிருந்தோ, எதிர்க்கட்சிகளிடமிருந்தோ வரும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் அழுத்ததிற்கும் உள்ளாகாமல் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை கொண்டு பணியாற்றுகின்றனர்.
இந்திய தேசிய காங்கிரஸ் இப்போது முழு அதிகாரத்துவத்தையும், அரசியலமைப்பை கடைபிடிக்கவும், தங்கள் கடமைகளை நிறைவேற்றவும், தேசத்திற்கு சேவை செய்யவும் வலியுறுத்துகிறது.
யாருக்காகவும் அச்சப்பட வேண்டாம். அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான எந்தவொரு வழிமுறைக்கும் தலைவணங்க வேண்டாம். வாக்கு எண்ணும் நாளில் யாருக்கும் பயப்பட வேண்டாம், தகுதியின் அடிப்படையில் உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.