உ.பி.: வேட்பாளர்களின் இறுதி நிலவரம் என்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் பாஜக வேட்பாளர் அருண் கோயல் 10585 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
உ.பி.: வேட்பாளர்களின் இறுதி நிலவரம் என்ன?
Published on
Updated on
1 min read

80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் இம்முறை (2024) பாஜகவை விட சமாஜவாதி கட்சி பல இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் பாஜக வேட்பாளர் அருண் கோயல் 10585 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். (இரவு 7.30 மணி நிலவரம்)

பல்லியா தொகுதியில் முன்னாள் முதல்வர் சந்திர சேகர் மகன் நீரஜ் சேகர் 38085 வாக்குகள் பின்தங்கியுள்ளார். அங்கு சமாஜவாதி கட்சி வேட்பாளர் சனாதன் பாண்டே முன்னிலை வகிக்கிறார்.

பிலிபிட் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாலர் ஜிதின் பிரசாத் 1,64,935 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து பாஜகவிற்கு தாவிய ரிதேஷ் பாண்டே, அன்பேத்கர் நகர் தொகுதியில் 1,36,877 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். சமாஜவாதி கட்சியின் வேட்பாளர் லால்ஜி வர்மா முன்னிலை வகிக்கிறார்.

போஜ்புரி தொகுதி நட்சத்திர வேட்பாளர் தினேஷ் லால் யாதவ் அத்தொகுதியில் தோல்வியைத் தழுவினார். சமாஜவாதி கட்சி வேட்பாளர் தர்மேந்திர யாதவிடம் 1,61,035 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வி அடைந்தார்.

உ.பி.: வேட்பாளர்களின் இறுதி நிலவரம் என்ன?
சிறையில் இருந்தவாறு வென்ற சுயேச்சை வேட்பாளர்!

அமேதி தொகுதியின் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் கட்சியின் கிஷோரி லால் சர்மாவிடம் 1,67,196 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

முஸாஃபர்நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சஞ்சீவ் குமார் பாலியான் 24,098 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். சமாஜவாதியின் ஹரேந்திர சிங் மாலிக் வெற்றி பெற்றார்.

சுல்தான்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் மேனகா காந்தி, 43,027 வாக்குகள் வித்தியாசத்தில் ராம்புல் நிஷாத்திடம் தோல்வி அடைந்தார்.

கன்னெளஜ் தொகுதியில் சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் 1,70,076 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

(இரவு 7.30 மணி நிலவரம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com