
மகாராஷ்டிரத்தில் நட்சத்திர வேட்பாளர்கள் பலர் முன்னிலையில் நீடித்து வருகின்றனர்.
மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி 56414 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் நீடித்து வருகிறார். அவர் 2,92,514 வாக்குகள் பெற்றுள்ளார்.
மும்பை வடக்குத் தொகுதியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் 1,31,898 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.
பீட் தொகுதியில் பாஜக வேட்பாளர் பங்கஜ் முண்டே 3083 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
பாரமதி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியின் வேட்பாளர் சுப்ரியா சூலே 16078 வாக்குகள் முன்னிலையில் நீடித்து வருகிறார்.
கல்யாண் தொகுதியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகனான ஸ்ரீகாந்த் ஷிண்டே 1,31,843 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
ஒளரங்காபாத் தொகுதியில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் எம்.பி. இம்தியாஸ் ஜலீல் 12123 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் நீடிக்கிறார்.
அமராவதி தொகுதியில் நடிகை நவ்னீத் ராணா 791 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.