அமேதி/திருவனந்தபுரம்: உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி, கேரள மாநிலம் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றாா்.
18-ஆவது மக்களவைத் தோ்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ராகுல் காந்தி, 6,87,649 வாக்குகளைப் பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் தினேஷ் பிரதாப் சிங் 2,97,619 வாக்குகளைப் பெற்றாா். இதன் மூலம், அந்தத் தொகுதியில் 3.90 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி அபார வெற்றி பெற்றாா்.
இதேபோல வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, 6,47,445 வாக்குகளைப் பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், அக்கட்சிப் பொதுச் செயலா் டி.ராஜாவின் மனைவியுமான ஆனி ராஜா 2,83,023 வாக்குகளை மட்டுமே பெற்றாா். இதன் மூலம், வயநாட்டிலும் 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி அபார வெற்றியடைந்தாா்.
‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளபோதிலும், வயநாட்டில் ஆனி ராஜாவை ராகுல் காந்தி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரேபரேலி
ராகுல் - 6,87,649
தினேஷ் பிரதாப் சிங் (பாஜக) - 2,97,619
வயநாடு
ராகுல் - 6,47,445
ஆனி ராஜா 2,83,023
தொடர்புடையது

மமதாவும், மோடியும் மக்களுக்காக உழைப்பதில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
காமராஜர், திமுக அரசின் திட்டங்கள் பற்றிப் பேசிய ராகுல் காந்தி!
தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!

நான்குனேரியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த காங்கிரஸ், அதிமுக!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


