இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடக்கம்!

சில முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்தும், வியூகங்களை வகுப்பது குறித்தும் விவாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.
இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடக்கம்!

மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அவரின் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

அதோடு மட்டுமின்றி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சித் தலைவர் சஞ்சய் ரெளத் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா கூட்டணி கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்தும், வியூகங்களை வகுப்பது குறித்தும் விவாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com