இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவு!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம்


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவு பெற்றது.
தில்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்தும், வியூகங்களை வகுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சித் தலைவர் சஞ்சய் ரெளத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,
சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள்பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்தலில் உறுதியாகப் போராடினோம். அதற்காக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நன்றி எனக் கூறினார்.
தேர்தல் முடிவுகள் மோடிக்கு எதிராக இருந்தும் மக்கள் விருப்பத்துக்கு மாறாக நரேந்திர மோடி செயல்படுவதாகவும், நரேந்திர மோடிக்கு எதிராக தீர்ப்பளித்தும் அதனை எப்படியாவது மாற்ற வேண்டும் என துடிப்பதாகவும் விமர்சித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...