காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

10 ஆண்டுகால அனுபவங்கள் கொண்டு மேலும் வளர்ச்சியை எட்டுவோம்: பிரதமர் மோடி

News image
Updated On :7 ஜூன் 2024, 1:32 pm

DIN

10 ஆண்டுகால அனுபவங்கள் கொண்டு மேலும் வளர்ச்சியை எட்டுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று சந்தித்த பின் குடியரசுத் தலைவர் மாளிகை முன் அவர் ஆற்றிய உரையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் வலுவான ஆட்சியை அமைக்கும். இந்தியாவின் வளர்ச்சி தொடரும் என்பதை இந்த தருணத்தில் நான் உறுதியளிக்கிறேன்.

நாட்டை 3ஆவது முறையாக வழிநடத்த எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. 18வது மக்களவை என்பது ஒரு புதிய தொடக்கத்திற்கு வித்திட்டுள்ளது. உலகம் நெருக்கடியை சந்தித்த நிலையில் சவாலை இந்தியா எதிர்கொண்டு வென்றது. ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளேன்.

10 ஆண்டுகால அனுபவங்கள் கொண்டு மேலும் வளர்ச்சியை எட்டுவோம். ஜூன் 9ஆம் தேதி மாலையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். வருங்காலத்திலும் அதே உத்வேகத்துடன் நமது அரசு இயங்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக 3-வது முறையாக ஆட்சியமைக்க பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.