ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்களுடன் ஜூன் 8-ல் அகிலேஷ் யாதவ் ஆலோசனை!

எதிர்காலச் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை

News image
அகிலேஷ் யாதவ்- PTI
Updated On :7 ஜூன் 2024, 1:51 pm

DIN

உத்தரப் பிரதேசத்தில் கணிசமான வெற்றியை பதிவு செய்ததையடுத்து சமஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்களுடன் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க சனிக்கிழமை கூட்டத்தை ஒருங்கிணைக்கவுள்ளார்.

சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு லக்னெளவில் தேர்தெடுக்கப்பட்ட சமஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் அகிலேஷ் யாதவை சந்திக்கவுள்ளனர். அதன் பிறகு எதிர்க்கட்சியாக சிறப்புடன் செயல்படுவது குறித்தும் தொகுதியின் பிரச்னையை மக்களவைக்கு கொண்டு செல்வது குறித்தும் உறுப்பினர்களுடன் எதிர்கால திட்டங்களை குறித்து அகிலேஷ் யாதவ் உரையாடவுள்ளார்.

மேலும், கட்சியில் இருந்து திடீரென மக்களவை தேர்தலின்போது பாஜகவுக்கு ஆதரவு அளித்த 7 எம்எல்ஏக்களின் உறுப்பினர் ஆதரவை திரும்ப பெறுவதற்கான கடிதத்தை பேரவை தலைவரிடம் அளிக்கவுள்ளது குறித்தும் விரைவில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் சமஜ்வாதி கட்சி உத்தரப் பிரதேசத்தில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 33 இடங்களிலும் காங்கிரஸ் 6 இடங்களிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 2 இடங்களிலும் ஆசாத் சமாஜ் கட்சி மற்றும் அப்னா தளம் தலா ஒரிடத்திலும் வெற்றி பெற்றன.

அயோத்தியில் வெற்றி பெறச் செயத மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அகிலேஷ் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.