47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பதவியேற்பு விழா! குடியரசுத் தலைவர் மாளிகையில் குவிந்த தலைவர்கள்!!

பல்வேறு தலைவர்கள் தில்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

News image
- படம் | பிடிஐ
Updated On :9 ஜூன் 2024, 1:29 pm

DIN

நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்கவுள்ளதையொட்டி, பல்வேறு தலைவர்கள் தில்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த சர்வதேச தலைவர்களும், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் விழா நடைபெறும் இடத்துக்கு வருகைபுரியத் தொடங்கியுள்ளனர்.

இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ், நேபாள பிரதமா் புஷ்ப கமல் தாஹால், மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் குமாா் ஜகநாத், பூடான் பிரதமா் ஷெரிங் தோப்கே, செஷல்ஸ் துணை அதிபா் அகமது அஃபிப் ஆகிய ஏழு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அவர்கள் தில்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், பதவியேற்பு விழா நடைபெறும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

இதேபோன்று மருத்துவம், சினிமா, தொழில் துறையைச் சேர்ந்தவர்களும் விழாவுக்கு வருகைதருகின்றனர்.

முகேஷ் அம்பானி, நடிகர் ஷாருக்கான் அடுத்தடுத்து ஒன்றாக பதவியேற்பு விழாவுக்கு வருகை புரிந்தனர். இதேபோன்று நடிகர் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், நாகேந்திர பாபு, ராஜ்குமார் ஹிரானி உள்ளிட்டோரும் வருகை புரிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.