பூஜா தோமர், அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப்பில் (UFC) வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரைச் சேர்ந்த பூஜா, கடந்த ஆண்டு யுஎஃப்சி ஒப்பந்தத்தைப் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். UFC லூயிஸ்வில் 2024-ல் பூஜா தோமர், பிரேசிலின் ராயண் டோஸ் சாண்டோஸை தோற்கடித்து, பெண்கள் ஸ்ட்ராவ்வெயிட் பிரிவில், 30-27,27-30, மற்றும் 29-28 மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றார்.
தனது வெற்றிக்குப் பிறகு பேசிய பூஜா, இந்த வெற்றியை இந்திய வீரர்கள் மற்றும் எம்.எம்.ஏ ரசிகர்களுக்கு அர்ப்பணிப்பதாகவும், இந்தியப் போராளிகள் தோல்வியடையவில்லை என்பதை உணர்த்த விரும்புவதாகவும் பூஜா கூறினார்.
"இந்திய வீரர்கள் தோல்வியடையவில்லை என்பதை உலகிற்குக் காட்ட விரும்புகிறேன். நாங்கள் எல்லா வழிகளிலும் மேலே செல்கிறோம்! நாங்கள் நிறுத்த மாட்டோம்! நாங்கள் விரைவில் யுஎஃப்சி சாம்பியன்களாக மாறுவோம்! இந்த வெற்றி எனது வெற்றி அல்ல, இது அனைத்து இந்திய ரசிகர்களுக்கும், அனைத்து இந்திய வீரர்களுக்கும் கிடைத்த வெற்றி. எனக்கு மிகவும் சிலிர்ப்பாக உள்ளது. 'நான் வெல்ல வேண்டும்' என்று மட்டும் தான் நினைத்தேன்" என்று பூஜா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.