
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூயார்க்கில் நடைபெறும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எப்போதும் அதிக அளவிலான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும். இந்த முறையும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லை.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐசிசியில் அவர் பேசியதாவது: நாம் அனைவரும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை மிகுந்த உணர்வுபூர்வமாக பார்க்கிறோம் என நினைக்கிறேன். ஏனென்றால், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நிறைய வரலாறு இருக்கிறது. பாகிஸ்தான் அணியில் சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். பேட்டிங்கில் இந்திய அணி வலுவாக இருப்பதாக நினைக்கிறேன்.
ரோஹித் சர்மா மற்றும் முகமது அமீர் இடையேயான போட்டி மற்றும் ஷகின் அஃப்ரிடி மற்றும் விராட் கோலி இடையேயான போட்டி எவ்வாறு இருக்கப் போகிறது என்பதைப் பார்க்க காத்திருக்கிறேன். ஆட்டத்தின் சூழ்நிலைகளைப் புரிந்து விளையாடுவது மிகவும் முக்கியம். ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு விளையாடும் அணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.