இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்கள் குவித்த ஆண்ட்ரே ரஸல்!

சர்வதேச டி20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஆண்ட்ரே ரஸல் 1000 ரன்கள் எடுத்துள்ளார்.

News image

படம் | மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :9 ஜூன் 2024, 12:26 pm

DIN

சர்வதேச டி20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஆண்ட்ரே ரஸல் 1000 ரன்கள் எடுத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் கயானாவில் உள்ள ப்ராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் உகாண்டா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஆண்ட்ரே ரஸல் அதிரடியாக 17 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும்.

உகாண்டாவுக்கு எதிரான போட்டியில் 30 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஆண்ட்ரே ரஸல். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக இதுவரை 77 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1000 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 71 ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.