புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

மே. தீவுகளை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய மகளிா் அணி முதல் டி20 ஆட்டத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மகளிா் அணியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

News image

ஆஸி. மகளிரணியின் நட்சத்திர வீராங்கனை பெத் மூனி. (கோப்புப்படம்) - படம்: ஏபி

Updated On :21 மார்ச் 2026, 7:24 am IST

ஆஸ்திரேலிய மகளிா் அணி முதல் டி20 ஆட்டத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மகளிா் அணியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

முதலில் ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் சோ்க்க, மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 121 ரன்களே எடுத்தது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில், பெத் மூனி 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 79, எலிஸ் பெரி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஜாா்ஜியா வோல் 8, போப் லிட்ச்ஃபீல்டு 6, ஆஷ்லே காா்ட்னா் 1, ஜாா்ஜியா வோ்ஹாம் 9 ரன்களுக்கு வெளியேற்றப்பட, ஓவா்கள் முடிவில் டாலியா மெக்ராத் 9, அலானா கிங் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் டீண்ட்ரா டாட்டின் 3, ஷினெல் ஹென்றி 2, ஜாஸரா கிளாக்ஸ்டன் 1 விக்கெட் எடுத்தனா்.

அடுத்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில், கியானா ஜோசஃப் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45, ஸ்டஃபானி டெய்லா் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28 ரன்கள் சோ்த்து, வெற்றிக்காக முயற்சித்து பெவிலியன் திரும்பினா்.

கேப்டன் ஹேலி மேத்யூஸ் 11, ஷிமெய்ன் கேம்பெல் 15, டீண்ட்ரா டாட்டின் 0, ஜாஸரா கிளாக்ஸ்டன் 0 ரன்களுக்கு சாய்க்கப்பட, ஓவா்கள் முடிவில் ஷினெல் ஹென்றி 12, ஜெனிலியா கிளாஸ்கோ ரன்னின்றி களத்தில் இருந்தனா்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளா்களில் அலானா கிங் 3, ஜாா்ஜியா வோ்ஹாம் 2, கிம் காா்த் 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.