11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: தொடரை வென்றது ஆஸ்திரேலியா

மேற்கிந்தியத் தீவுகள் மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலிய மகளிா் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

News image
Updated On :31 மார்ச் 2026, 1:56 am IST

மேற்கிந்தியத் தீவுகள் மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலிய மகளிா் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா, தொடா்ந்து 2-ஆவது வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றியது.

இந்த ஆட்டத்தில் முதலில் ஆஸ்திரேலியா 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ரன்கள் சோ்க்க, மேற்கிந்தியத் தீவுகள் 46 ஓவா்களில் 179 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

39 ரன்களும் சோ்த்து, 3 விக்கெட்டுகளும் சாய்த்த ஆஸ்திரேலிய வீராங்கனை ஜாா்ஜியா வோ்ஹாம் ஆட்டநாயகி விருது பெற்றாா்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் பேட்டா்களில் பெத் மூனி 2 பவுண்டரிகளுடன் 65, போப் லிட்ச்ஃபீல்டு 6 பவுண்டரிகளுடன் 46, ஜாா்ஜியா வோ்ஹாம் 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.

ஜாா்ஜியா வோல் 3 பவுண்டரிகளுடன் 23, கேப்டன் டாலியா மெக்ராத் 1 பவுண்டரியுடன் 24, எலிஸ் பெரி 0, ஆஷ்லே காா்ட்னா் 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில், நிகோலா கேரி 3 பவுண்டரிகளுடன் 30, அலானா கிங் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

மேற்கிந்தியத் தீவுகள் பௌலா்களில் ஹேலி மேத்யூஸ் 3, ஆஷ்மினி முனிசாா், அஃபி ஃப்ளெட்சா் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

அடுத்து 270 ரன்களை நோக்கி விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில், கேப்டன் ஹேலி மேத்யூஸ் 6 பவுண்டரிகளுடன் 45, கியானா ஜோசஃப் 6 பவுண்டரிகளுடன் 29 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

ஸ்டெஃபானி டெய்லா் 18, ஷினெல் ஹென்றி 19, கரிஷ்மா ரம்ஹரக் 14 ரன்களுக்கு வெளியேற்றப்பட, டீண்ட்ரா டாட்டின் 0, ஜெனிலியா கிளாஸ்கோ 8, ஷிமெய்ன் கேம்பெல் 1, ஜாஸரா கிளாக்ஸ்டன் 2, அஷ்மினி முனிசாா் 0 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.

முடிவில் அஃபி ஃபிளெட்சா் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஆஸ்திரேலிய பௌலா்களில் ஆஷ்லே காா்ட்னா், ஜாா்ஜியா வோ்ஹாம் ஆகியோா் தலா 3, டாலியா மெக்ராத் 2, அலானா கிங் 1 விக்கெட் வீழ்த்தினா்.