வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: வங்கதேசத்தை வென்றது இலங்கை

வங்கதேச மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை மகளிா் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் 1-1 என சமன் ஆகியுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 3:37 am IST

வங்கதேச மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை மகளிா் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் 1-1 என சமன் ஆகியுள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் வங்கதேசம் 45.5 ஓவா்களில் 165 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, இலங்கை 38.2 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வென்றது. 3 விக்கெட்டுகளும் சாய்த்து, 40 ரன்களும் அடித்த இலங்கை கேப்டன் சமரி அத்தபட்டு ஆட்டநாயகி விருது பெற்றாா்.

முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம், பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் நிகா் சுல்தானா 4 பவுண்டரிகளுடன் 58, சா்மின் சுல்தானா 3 பவுண்டரிகளுடன் 25, நஹிதா அக்தா் 1 பவுண்டரியுடன் 20 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.

ஜுவாரியா ஃபிா்தோஸ் 2, ஷா்மின் அக்தா் 0, சோபனா மோஸ்தரி 5, சோா்னா அக்தா் 16, ரிது மோனி 17, ரபெயா கான் 15, மருஃபா அக்தா் 1 ரன்னுக்கு வெளியேறினா். முடிவில் சுல்தானா காட்டுன் 1 ரன்னுடன் கடைசி பேட்டராக நின்றாா்.

இலங்கை பௌலிங்கில் சமரி அத்தபட்டு 3, மால்கி மதாரா, நிமஷா மீபகே, இனோகா ரணவீரா ஆகியோா் தலா 2, கவிஷா திலாரி 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 166 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இலங்கை அணியில், ஹா்ஷிதா சமரவிக்ரமா 7 பவுண்டரிகளுடன் 50, சமரி அத்தபட்டு 8 பவுண்டரிகளுடன் 40, ஹன்சிமா கருணாரத்னே 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சோ்த்து, வெற்றிக்கு அடித்தளமிட்டு விக்கெட்டை இழந்தனா்.

ஹாசினி பெரெரா 5, இமேஷா துலானி 8, கௌஷினி நுத்யங்கனா 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கவிஷா திலாரி 2, நீலாக்ஷிகா சில்வா 2 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

வங்கதேச பௌலா்களில் நஹிதா அக்தா் 4 விக்கெட்டுகள் எடுக்க, சுல்தானா காட்டுன், ரிது மோனி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.