
டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் உகாண்டா 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் கயானாவில் உள்ள ப்ராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் உகாண்டா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய உகாண்டா அணி மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதற்கு முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்து அணி இலங்கைக்கு எதிராக 39 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே டி20 உலகக் கோப்பையில் ஒரு அணி மிகக் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்ததாக இருந்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்ததன் மூலம் நெதர்லாந்தின் மோசமான சாதனையை உகாண்டா சமன் செய்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் மிகக் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த அணிகள்
நெதர்லாந்து - 39 ரன்கள் - இலங்கைக்கு எதிராக, 2014
உகாண்டா - 39 ரன்கள் - மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக, 2024
நெதர்லாந்து - 44 ரன்கள் - இலங்கைக்கு எதிராக, 2021
மேற்கிந்தியத் தீவுகள் - 55 ரன்கள் - இங்கிலாந்துக்கு எதிராக, 2021
உகாண்டா - 58 ரன்கள் - ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.