அமைச்சரானார் தெலுங்கு தேசம் கட்சியின் ராம்மோகன் நாயுடு!
தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.யான ராம்மோகன் நாயுடு மத்திய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
dinamani
dinamani
தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.யான ராம்மோகன் நாயுடு மத்திய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் ஸ்ரீகாகுளம் தொகுதியில் போட்டியிட்டு 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

ராம்மோகன் நாயுடு
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் பாஜக உடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்த தெலுங்கு தேசம் கட்சி, 16 இடங்களில் வெற்றி பெற்றது.
நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.
பதவியேற்பு விழாவில் சந்திரபாபு நாயுடு
நாட்டின் பிரதமராக பிரதமர் நரேந்திர மோடி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் பிரதமராக பதவியேற்றுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 3 முறை பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேருவின் சாதனையை மோடி சமன் செய்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர். அதில் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து ராம்மோகன் நாயுடு அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...