அமைச்சர் பதவியிலிருந்து விலகலா? சுரேஷ் கோபி விளக்கம்

அமைச்சர் பதவியிலிருந்து விலகலா? சுரேஷ் கோபி விளக்கம்

“அமைச்சரவையில் இருந்து விலகல் என்பது தவறான செய்தி.”
Published on

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து சுரேஷ் கோபி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். அவர் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கிடையே, தொடர்ந்து படத்தில் நடிக்க இருப்பதால், அமைச்சர் பதவியில் விருப்பம் இல்லை என்றும் பதவி விலகுவது குறித்து கட்சித் தலைமையிடம் பேசியுள்ளதாகவும் மலையாள ஊடகத்துக்கு சுரேஷ் கோபி பேட்டியளித்ததாக இன்று காலை செய்தி வெளியாகின.

அமைச்சர் பதவியிலிருந்து விலகலா? சுரேஷ் கோபி விளக்கம்
அமைச்சர் பதவி வேண்டாம்: சுரேஷ் கோபி

இந்த நிலையில், ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து சுரேஷ் கோபி எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

“நான் அமைச்சரவையில் இருந்து விலகவுள்ளதாக தவறான செய்தி பரவி வருகின்றன. இது முற்றிலும் தவறானது. மோடியின் தலைமையின் கீழ் கேரளத்தின் வளர்ச்சிக்காக பணியாற்ற உறுதியாக இருக்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com