பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

மேற்காசிய போர்: இந்தியா நிலைப்பாடு என்ன? மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!

மேற்காசிய போர் - இந்தியா நிலைப்பாடு குறித்து ஜெய்சங்கரின் விளக்கம்...

ஜெய்சங்கர் - PTI

Published On :

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு இன்று தொடங்கியிருக்கும் நிலையில், மேற்காசிய போர் குறித்து மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த ஜன. 28-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கியது. கடந்த பிப்.13-ஆம் தேதியுடன் முதல்கட்ட அமா்வு நிறைவடைந்தது.

இந்த நிலையில், இரண்டாம் கட்ட அமர்வு இன்று காலை தொடங்கிய நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெறும் போர் குறித்து மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.

மேற்காசிய போர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கோரிக்கை மறுக்கப்பட்டதால், எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளிக்கு மத்தியில் ஜெய்சங்கர் உரையாற்றினார்.

ஜெய்சங்கர் பேசியதாவது:

”மேற்காசிய நாடுகள் மோதல் குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்து பிப். 20 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. அமைதியைக் கடைப்பிடிக்க இரு தரப்பினரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. பதட்டங்களைத் தணிக்க பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் நடவடிக்கை தொடர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

மேற்காசிய சூழலை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். தொடர்ச்சியான மோதல் இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது. வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் தங்கி, பணிபுரிந்து வருகிறார்கள். ஈரானிலும், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இருக்கிறார்கள். வளைகுடா நாடுகள் நமது எரிசக்தி பாதுகாப்புக்கு முக்கியமான ஒன்று. நமக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகிக்கும் முக்கிய நிறுவனங்கள் இருக்கின்றன. விநியோகச் சங்கிலி சீர்குலைவு மற்றும் நிலையற்ற தன்மை ஆகியவை கடும் பிரச்னைகளாக இருக்கின்றன.

மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. பாதுகாப்பு நிலைமை கணிசமாக மோசமடைந்துள்ளது. மற்ற நாடுகளிலும் போர் பரவி வருகின்றது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவைச் சேர்ந்த இரண்டு மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஒருவரைக் காணவில்லை.

தெஹ்ரானில் உள்ள பல இந்திய மாணவர்கள் இந்திய தூதரகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வணிக நிமித்தமாக ஈரான் சென்ற இந்தியர்கள், ஆர்மீனியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெஹ்ரானில் உள்ள நமது தூதரகம் மிகுந்த எச்சரிக்கையுடன் முழுமையாக செயல்பட்டு வருகிறது. இந்தியர்களை பாதுகாப்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

Summary

West Asia War: What is India's position? Jaishankar's explanation in the Rajya Sabha!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.