ஹிஜாப் அணியத் தடை: வேலையை ராஜிநாமா செய்த ஆசிரியை!

கல்லூரியில் ஹிஜாப் அணியத் தடை விதித்ததால், ஆசிரியை ஒருவர் வேலையை ராஜிநாமா செய்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

மேற்கு வங்கத்தில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் சட்டக் கல்லூரியில் ஆசிரியை ஒருவருக்கு ஹிஜாப் அணிய தடை விதித்ததால் அவர் பணியிலிருந்து விலகியுள்ளார்.

கொல்கத்தாவிலுள்ள எல்.ஜே.டி தனியார் சட்டக் கல்லூரியில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் ஆசிரியை சஞ்சிதா காதர். இவரை, கடந்த மே 31 முதல் பணியிடத்தில் ஹிஜாப் அணிய கல்லூரி நிர்வாகம் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஜூன் 5 முதல் பணியிலிருந்து ராஜிநாமா செய்வதாக ஆசிரியைத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பொதுவெளியில் தெரிந்து கல்லூரி மீது விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், ஆசிரியையின் ராஜிநாமாவை நிராகரித்து அவரை இன்று (ஜூன் 11) முதல் கல்லூரிக்கு வர சொல்லியிருப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்னை குறித்துப் பேசிய கல்லூரி நிர்வாக இயக்குநர் கோபால் தாஸ், “கல்லூரியில் எவருடைய மத உணர்வுகளையும் புண்படுத்துமாறு எந்த உத்தரவோ, தடையோ இல்லை. இது தகவல் பரிமாற்றத்தில் நடந்த குழப்பமே. இது தொடர்பாக நாங்கள் சஞ்சனாவைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் இன்று முதல் வேலைக்கு வருவார். இப்போது எந்தக் குழப்பமும் இல்லை” என்று கூறினார்.

கோப்புப்படம்
முஸ்லிம் இல்லாத முதல் அமைச்சரவை!

இதுதொடர்பாக அந்த ஆசிரியை பேசிய போது, “கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவு எனது மத உணர்வுகள் மற்றும் மதிப்புகளைப் புண்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை கல்லூரியிலிருந்து எனக்கு பணிக்குத் திரும்புமாறு மெயில் வந்தது. எனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து யோசித்து முடிவெடுக்க வேண்டும். ஆனால், நான் கல்லூரிக்கு இன்று செல்வதாக இல்லை” என்று தெரிவித்தார்.

ஆசிரியைக்கு ஆதரவு தெரிவித்துப் பேசிய மேற்கு வங்க அமைச்சரும், ஜமியத் உலெமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவருமான சித்திக்குல்லா சௌதாரி, “கல்லூரி நிர்வாகம் அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜக, ஆர்எஸ்எஸ் உத்தரவில் கல்லூரி வேலை செய்கிறதா என்று ஆச்சரியமாக உள்ளது.     

கோப்புப்படம்
ஒடிஸாவில் முதல் முஸ்லிம் பெண் எம்எல்ஏ!

கல்லூரி நிர்வாகம் அடுத்தவரின் உணர்வை மதிக்காமல் பிற்போக்காக நடந்து, மாணவர்களையும் இந்த விவகாரத்தில் ஆசிரியைக்கு எதிராகத் தூண்டி விடுகிறது.

எப்படி ஒரு சட்டக் கல்லூரி நிர்வாகம் இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பிக்க முடியும்? கல்லூரியில் சீக்கிய ஆண்கள் தலைப்பாகை அணியவும், சீக்கியப் பெண்கள் தலையை மூடும் ஆடை அணியவும் அனுமதி உள்ளதே. பின் இஸ்லாமியர்களை மட்டும் ஏன் குறிவைக்கிறீர்கள்?

அரசின் சார்பில், இந்த விவகாரம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளக் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

சஞ்சிதா சில மாதங்களாகவே ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்துள்ளார். ஆனால், இந்த பிரச்னை கடந்த சில நாட்களில் தீவிரமடைந்ததால் பணியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார். தற்போது அவருக்கு அனுப்பப்பட்ட மெயிலில், பணி நேரத்தில் தலையை மூடுமாறு ஆடை அணியத் தடை இல்லை என்று கல்லூரி நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com