தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உ.பி.யில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதல்: 8 பேர் பலி!

வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2024, 6:30 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் கேசவ் சத்ரா கோஸ்வாமி கூறுகையில்,

இன்று அதிகாலை மணல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று திரும்பும்போது வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் உயிருடன் மணலில் புதைந்தனர். குடும்பத்தினரை மீட்க அப்பகுதியினர் மணலை அகற்ற முயன்றனர். ஆனால் அகற்ற முடியாத காரணத்தால் புல்டோசர் வரவழைக்கப்பட்டு மணல் அள்ளப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டன.

இறந்தவர்கள் அவதேஷ் (40), அவரது மனைவி சுதா (35) மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் லல்லா (5), சுனைனா (11) பட்டு (4) மற்றும் அவர்களது உறவினர் கரண் (35), அவரது மனைவி ஹீரா (30) அவர்களது மகள் கோமல் (5) ஆகியோர் ஆவார்.

இந்த சம்பவத்தில் மேலும் ஒரு ஐந்து வயது சிறுமி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அந்த அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து லாரி ஓட்டுநர் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.