மின் கம்பத்தின் மீது லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு


கோவை, மாா்ச் 14: கோவையில் மின் கம்பத்தின் மீது மினி லாரி மோதிய விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் (58). இவா், மதுக்கரையை அடுத்த திருமலையாம்பாளையம் பகுதியில் தங்கி லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.
மாரியப்பன் மினி லாரியில் நுங்கு லோடு ஏற்றிக் கொண்டு கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இறக்கிவிட்டு, மீண்டும் திருமலையாம்பாளையம் நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
சுந்தராபுரம் பொங்காளியம்மன் கோயில் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து போக்குவரத்து புலனாய்வு மேற்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...