விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தண்ணீர் கேட்டதால் கொலை: புணே

நள்ளிரவில் தண்ணீர் கேட்டதால் பக்கத்து வீட்டார் கொலை

News image

கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2024, 7:23 am

புனேவில் நள்ளிரவில் தண்ணீர் கேட்டு துயரம் செய்ததால், பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

புனேவின் முந்த்வா பகுதியில் ஸ்ரீகாந்த் அல்ஹாட் தனியாக வசித்து வந்தார். அவர் பக்கத்து வீட்டுக்காரரான ராகேஷ் துகாராம் கெய்க்வாட்டிடம் தண்ணீர் கேட்டுள்ளார். அல்ஹாட்டின் மதுவருந்தும் பழக்கம் காரணமாக, முன்னரே கெய்க்வாட்டுக்கும் அல்ஹாட்டுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளது. இதற்கிடையில் நள்ளிரவில் தண்ணீர் கேட்டு துயரம் செய்ததாலும், அல்ஹாட்டை கெய்க்வாட் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதனால், அல்ஹாட் சுயநினைவை இழந்தும், பலத்த காயங்களினால் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளார் எனத் தெரியவருகிறது.

உயிரிழந்த அல்ஹாட்டின் சகோதரர் சந்தோஷ் அல்ஹாட் காவல்துறையில் புகாரளித்ததன் அடிப்படையில், ராகேஷ் துகாராம் கெய்க்வாட் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஜூன் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.