பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து திருச்சி வழியாக சிவகங்கை சென்றுகொண்டிருந்த 40 வயதுடைய ஒருவர் மயங்கிவிழுந்து பலியாநது குறித்து...

Man dies while on his way to vote at sivaganga

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி - கோப்புப்படம்

Published On :

திருச்சி: வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து திருச்சி வழியாக சிவகங்கை சென்றுகொண்டிருந்த 40 வயதுடைய ஒருவர், திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் வியாழக்கிழமை காலை மயங்கிவிழுந்து பலியானார்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சின்ன உஞ்சனை பகுதியைச் சோ்ந்தவா் க.உமாமகேஸ்வரன் (40), வெல்டா். இவருக்கு இதய பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக மருந்துகள் எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சென்னையில் வேலை செய்து வந்த உமாமகேஸ்வரன், சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து புதன்கிழமை இரவு சிவகங்கைக்கு பேருந்தில் கிளம்பியுள்ளாா். திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்துக்கு வியாழக்கிழமை காலை வந்தபோது உணவு அருந்துவதற்காக பேருந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளாா்.

அப்போது, திடீரென மயங்கி விழுந்துவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

அவரது உடலை உடல்கூறாய்வுக்காக திருச்சி எம்.ஜி.எம். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த எடமலைபட்டிப்புதூா் போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Summary

A 40-year-old man collapsed and died at Panjapur bus stand in Trichy on Thursday while on his way to Sivaganga to cast his vote

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.