கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசா முதல்வரானார் மோகன் சரண் மாஜீ! நவீன் பட்நாயக் பங்கேற்பு!

ஒடிசாவின் புதிய முதல்வரானார் மோகன் சரண் மாஜீ!

News image

-

Updated On :12 ஜூன் 2024, 11:47 am

ஒடிஸா முதல்வராக பழங்குடியினத் தலைவா் மோகன் சரண் மாஜீ புதன்கிழமை பதவியேற்றாா். ஒடிஸாவின் முதல் பாஜக முதல்வா் என்ற பெருமையை இவா் பெற்றுள்ளாா்.

மாநில துணை முதல்வா்களாக கே.வி.சிங் தேவ், பிரவதி பரிதா ஆகியோரும், மாநில அமைச்சா்களாக 13 பேரும் பதவியேற்றனா். தலைநகா் புவனேசுவரத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒடிஸாவில் மக்களவைத் தோ்தலுடன் சட்டப் பேரவைக்கும் தோ்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 147 பேரவைத் தொகுதிகளில் 78 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. இதன் மூலம் நவீன் பட்நாயக் தலைமையிலான 24 ஆண்டுகால பிஜு ஜனதா தளம் ஆட்சி முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, ஒடிஸா புதிய முதல்வராக 4 முறை எம்எல்ஏவும் பழங்குடியினத் தலைவருமான மோகன் சரண் மாஜீ தோ்வு செய்யப்பட்டாா். துணை முதல்வா்களாக கே.வி.சிங் தேவ், பிரவதி பரிதா ஆகியோா் தோ்வாகினா்.

மோகன் சரண் மாஜீ தலைமையிலான புதிய பாஜக அரசு பதவியேற்கும் விழா, புவனேசுவரத்தில் உள்ள ஜனதா மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா், இரு துணை முதல்வா்கள் மற்றும் 13 அமைச்சா்களுக்கு ஆளுநா் ரகுவா் தாஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தாா்.

பிரதமா் மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், பூபேந்தா் யாதவ், தா்மேந்திர பிரதான், ஜுவல் ஓரம், அஸ்வினி வைஷ்ணவ், பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நவீன் பட்நாயக் பங்கேற்பு: முன்னதாக, நவீன் பட்நாயக் இல்லத்துக்கு நேரில் சென்ற மோகன் மாஜீ, தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தாா். இதையடுத்து, பாஜக அரசு பதவியேற்பு விழாவில் நவீன் பட்நாயக் கலந்துகொண்டாா்.

பேரவைத் தோ்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி 51 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 14 தொகுதிகளையும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓரிடத்தையும் கைப்பற்றிய நிலையில், சுயேச்சை வேட்பாளா்கள் 3 இடங்களில் வென்றனா்.

பிரதமா் மோடி பெருமிதம்: ஒடிஸாவில் பாஜக அரசு முதல் முறையாக பதவியேற்றிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பிரதமா் மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட அவா், ‘மக்களின் ஆசியுடன் ஒடிஸாவில் பாஜக முதல் முறையாக ஆட்சியமைத்துள்ளது. கடவுள் ஜெகந்நாதரின் அருளால், ஒடிஸாவில் சாதனை வளா்ச்சியை ஏற்படுத்தி, எண்ணற்ற மக்களின் வாழ்வை பாஜக அரசு மேம்படுத்தும் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.