ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

கொல்கத்தா வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

கொல்கத்தா வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

News image
Updated On :14 ஜூன் 2024, 9:22 am

DIN

கொல்கத்தாவின் மிகப்பெரிய வணிக வளாகத்தில் இன்று பயங்கர தீ விபத்து நேரிட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 15 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

வணிக வளாகத்தில் இயங்கி வந்த உணவு வளாகத்தில் தீ பரவியதால், அங்கு ஏராளமானோர் தீயில் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த வணிக வளாகத்துக்குள் தீ விபத்து நேரிட்ட போது, அங்கிருந்த மக்கள் அங்கும் இங்கும் ஓடும் விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது.

இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. ஆக்ஸிஜன் கவசம் அணிந்தபடி தீயணைப்பு வீரர்கள் கட்டடத்துக்குள் நுழைந்திருப்பதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.

தீ விபத்து நேரிட்டதும், வணிக வளாகம் முழுவதும் பயங்கர புகை மூட்டம் சூழ்ந்துகொண்டது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு மீட்புப் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தின.

பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.