நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எக்ஸ் பக்கத்தில் முகப்புப் படத்தை மாற்றிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றியுள்ளார்

News image
Updated On :14 ஜூன் 2024, 6:17 am

DIN

பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றியுள்ளது பேசுபொருளாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் பக்கத்தை சுமார் 98.8 மில்லியன் பயனர்கள் பின்தொடர்கின்றனர். உலகிலேயே அதிக பயனர்களால் பின்தொடரப்படுகிற பிரதமர் என்ற சாதனையும் பிரதமர் மோடி பெற்று வருகிறார். மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 90.7 மில்லியன் பயனர்களும் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றியுள்ளது பேசுபொருளாகி வருகிறது. அதாவது, பிரதமர் மோடி மஞ்சள்நிற உடையணிந்த புகைப்படத்தினை முகப்புப் படமாக வைத்திருக்கிறார். தெலுங்கு தேசக்கட்சியின் கொடியும் மஞ்சள் நிறத்தினையேக் கொண்டிருக்கும். இதிலிருந்து, பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியமைப்பதற்கு தெலுங்கு தேசத்தினுடனான கூட்டணி, இன்றியமையாததாக இருந்தது என பிரதமர் மோடி கூறவருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இன்னும் சிலர் ஐபிஎல் கிரிக்கெட்டின் சிஎஸ்கே அணியின் உடை நிறத்தில் இருப்பதாகக் கருத்து தெரிவிக்கின்றனர்.

அண்மையில் நடைபெற்ற 18-ஆவது மக்களவைத் தோ்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. 240 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இருப்பினும், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16) மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (12) ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.