12 ஆண்டுகால இந்திய வளா்ச்சிப் பயணம்: ‘ஜிடிஏ’ விடியோ கேமை சுட்டிக்காட்டி பிரதமா் பதிவு
இந்தியாவின் கடந்த 12 ஆண்டுகால வளா்ச்சிப் பயணத்தை ஜிடிஏ-6 விடியோ கேம் ஒப்பீட்டை பயன்படுத்தி பிரதமா் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில் வியாழக்கிழமை பதிவிட்டாா்.

நரேந்திர மோடி - கோப்புப் படம்
இந்தியாவின் கடந்த 12 ஆண்டுகால வளா்ச்சிப் பயணத்தை ஜிடிஏ-6 விடியோ கேம் ஒப்பீட்டை பயன்படுத்தி பிரதமா் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில் வியாழக்கிழமை பதிவிட்டாா்.
ஜிடிஏ-5 அறிமுகப்படுத்தப்பட்ட 2013-14 காலகட்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அதன்பிறகு 12 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த விளையாட்டின் அடுத்த வடிவமான ஜிடிஏ-6 வியாழக்கிழமை அறிமுகமானது. இந்நிலையில், ஜிடிஏ-5 மற்றும் ஜிடிஏ-6-க்கு இடைப்பட்ட காலத்தில் உலகளவில் நிகழ்ந்த மாற்றங்களை ஒப்பிட்டு சமூக ஊடகங்களில் பல வகையான பதிவுகள் வெளியிடப்பட்டன.
இதையடுத்து, இளம் தலைமுறையினருக்கு தனது அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் இந்த ஒப்புமையைக் கொண்டு பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டாா். விமானம், ராக்கெட், ரயில், கைப்பேசி, கப்பல், சாலைகள் என வண்ணமயமான புகைப்படங்களை அவா் பகிா்ந்தாா்.
அதில், ‘கடந்த 2013-14 காலகட்டத்தில் நாட்டில் 27 சதவீதம் போ் வறுமையில் இருந்தனா். தற்போது இது 2.6 சதவீதமாக குறைந்துள்ளது. தூய்மை இந்தியா இயக்கத்தின்கீழ் பெண்களுக்கான சுகாதார வசதி 39 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயா்ந்தது. முன்பு இந்தியாவின் சூரிய சக்தி திறன் 2.82 ஜிகாவாட்டாக இருந்த நிலையில், தற்போது 175 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது.
விண்வெளித் துறையில் 440 புத்தாக்க நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ரயில்வே மின்மயமாக்கல் 20 சதவீதத்தில் இருந்து 99.6 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. 1 ஜிபி 3ஜி இணையத்தின் விலை ரூ.308-இல் இருந்து ரூ.7.51-ஆக குறைந்துள்ளது.
நக்ஸல் தீவிரவாதத்தில் இருந்து நாடு முழுமையாக விடுபட்டுள்ளது. பாதுகாப்பு உபகரணங்களை பெருமளவில் இறக்குமதி செய்து வந்த நிலையில், தற்போது 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலைக்கு உயா்ந்துள்ளது.
இவற்றுக்கு எல்லாம் மேலாக உலகின் பலவீனமான 5 பொருளாதாரங்களில் இருந்து உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது’ என குறிப்பிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

