ஜிடிஏ 6! ஒரு விடியோவால் ஒரே நாளில் ரூ. 10 லட்சம் சம்பாதித்த யூடியூபர்!
ஜிடிஏ 6 கேம் வெளியீட்டு நிகழ்ச்சி நேரலையால் ஒரே நாளில் ரூ. 10 லட்சம் வரையில் யூடியூபர் மிதிலேஷ் பதாங்கர் சம்பாதித்தது குறித்து...
ஒரு விடியோவால் ஒரே நாளில் ரூ. 10 லட்சம் சம்பாதித்த யூடியூபர் மிதிலேஷ் பதாங்கர் - Youtube
ஜிடிஏ 6 கேம் வெளியீட்டு நிகழ்ச்சி நேரலையால் ஒரே நாளில் ரூ. 10 லட்சம் வரையில் யூடியூபர் மிதிலேஷ் பதாங்கர் வருமானம் ஈட்டியுள்ளார்.
இளைஞர்கள், சிறுவர்கள் என பல தரப்பினரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜிடிஏ 6 விடியோ கேம், இன்று (நவ. 19) உலகம் முழுவதும் வெளியானது.
முதற்கட்டமாக பிளேஸ்டேஷன் 5, எக்ஸ் பாக்ஸ் சீரிஸ் எக்ஸ், எஸ் கன்சோலில் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், கம்ப்யூட்டருக்கான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மேலும், இன்றைக்கு உலகளவிலான சமூக ஊடகங்களில் ஜிடிஏ 6-தான் டிரெண்டிங்கில் உள்ளது.
இதனிடையே, ஜிடிஏ 6 கேமின் வெளியீட்டு நிகழ்ச்சியும் யூடியூப் தளத்தில் நேரலையை தயாரிப்பு நிறுனமான ராக்ஸ்டார் கேம்ஸ் ஒளிபரப்பு செய்தது. இதற்காக இந்தியாவில் 4 பேரை ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த யூடியூப் நேரலையில் விளையாட்டுக் காட்சிகள், உரையாடல்கள் மூலம் கேமர்கள் (Gamers) ஒன்றிணைக்கப்பட்டனர்.
இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பிரபல கேமர் மிதிலேஷ் பதாங்கரும் ஒருவர். பல வகையான விடியோ கேம்கள் குறித்து இவரின் 'மித்பாட்' யூடியூப் பக்கத்தில் விடியோ வெளியிட்டு வருகிறார். இவரின் யூடியூப் பக்கத்தை 1.78 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
ஜிடிஏ 6 விடியோ கேம் வெளியீட்டு நிகழ்ச்சி நேரலையை ஒளிபரப்பிய நிலையில், நேரலையை 1.46 கோடி பேர் கண்டுகளித்தனர்.
ஜிடிஏ 6 நேரலை விடியோ மூலமாக மட்டும் 10 மணி நேரத்திலேயே ரூ. 10 லட்சம் வரையில் மிதிலேஷ் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.
Summary
YouTuber Mithilesh Patankar earned up to Rs 10 lakh in a single day through his live stream of the GTA 6 game launch event
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


