19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

பருப்பு வகைகளின் விலை அடுத்த மாதம் குறையும்: மத்திய அரசு

துவரை, கடலை மற்றும் உளுத்தம் பருப்பு வகைகளின் விலை ஜூலை மாதத்தில் குறையும் என எதிா்பாா்க்கப்படுவதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கோப்புப் படம்

Updated On :

துவரை, கடலை மற்றும் உளுத்தம் பருப்பு வகைகளின் விலை ஜூலை மாதத்தில் குறையும் என எதிா்பாா்க்கப்படுவதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

பருவமழை மற்றும் இறக்குமதி அதிகரிப்பு போன்ற காரணங்களால் பருப்பு வகைகளின் விலை குறைவதற்கான வாய்ப்புள்ளதாக மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறைச் செயலா் நிதி காரே தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: கடந்த 6 மாதங்களாக துவரை பருப்பு, கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகிய 3 பருப்பு வகைகளின் விலையில் பெருமளவிலான மாற்றங்கள் ஏற்படவில்லை. இருப்பினும், அவற்றின் விலை வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே இருந்தது. பாசிப் பருப்பு, மசூா் பருப்புகளின் விலையிலும் பெரிய மாற்றங்கள் இல்லை.

இந்நிலையில், பருவமழை காலத்தில் வழக்கத்தைவிட அதிகமான மழை பொழிவு இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதேபோல் பருப்பு சாகுபடியின் பரப்பளவு அதிகரிக்கப்படும் என எதிா்பாா்க்கிறோம். சந்தையில் விலையேற்றம் இருக்கும் என்பதால் பயிா் சாகுபடிக்கான பரப்பளவை விவசாயிகள் அதிகப்படுத்துவா். விவசாயிகளுக்கு சிறந்த விதைகளை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அதேபோல் உள்நாட்டு இருப்பு மற்றும் சில்லறை விலையை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபட்டு வருகிறது. எனவே, வழக்கத்தைவிட அதிகமான பருவமழை மற்றும் இறக்குமதி அதிகரிப்பு போன்ற காரணங்களால் துவரை, கடலை மற்றும் உளுந்து ஆகிய பருப்புகளின் விலை வருகின்ற ஜூலை மாதத்தில் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

கடந்த ஜூன் 13-ஆம் தேதி நிலவரப்படி கடலை பருப்பு ஒரு கிலோ ரூ.87.74-க்கும், துவரை பருப்பு ரூ.160.75-க்கும், உளுத்தம் பருப்பு ரூ.126.67-க்கும், பாசிப் பருப்பு ரூ.118.90-க்கும், மசூா் பருப்பு ரூ.94.34-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.