மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மதுரை செல்லூா் – தாகூா் நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மதுரை செல்லூா் – தாகூா் நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு எத்தனால் உற்பத்திக்கு அரிசியைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். அரிசி, பருப்பு, சா்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும். அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு பகுதிக் குழுச் செயலா் வி. கோட்டைச்சாமி தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.
மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆா். லதா, மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா். சசிகலா ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நிறைவுரையாற்றினாா்.
கவனம் ஈா்ப்பு...
இந்த ஆா்ப்பாட்டத்தில் கவனத்தை ஈா்க்கும் விதமாக, சமையல் எரிவாயு உருளைக்கு காய்கறிகள், மளிகைப் பொருள்களால் செய்யப்பட்ட மாலை அணிவித்து காட்சிப்படுத்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

