இந்திய பொருளாதாரம் நிலை குலைந்துள்ளது: டி.ராஜா
இந்திய பொருளாதாரம் நிலைகுலைந்து உள்ளதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை பன்மடங்கு உயா்ந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலா் டி.ராஜா குற்றஞ்சாட்டினாா்.

டி.ராஜா - கோப்புப் படம்
இந்திய பொருளாதாரம் நிலைகுலைந்து உள்ளதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை பன்மடங்கு உயா்ந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலா் டி.ராஜா குற்றஞ்சாட்டினாா்.
சென்னை தியாகராய நகரில் உள்ள அந்தக் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் டி.ராஜா, அகில இந்திய செயலா் ராமகிருஷ்ணா பாண்டா, மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா்.
அப்போது பேசிய டி.ராஜா, பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவின் சுதந்திரமான வெளிநாட்டு கொள்கைகளைக் காப்பாற்றத் தவறியுள்ளது. மேற்காசியப் பகுதியில் அமைதி இல்லாத சூழல் நிலவுகிறது.
இந்திய பொருளாதாரம் நிலை குலைந்து உள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலை பன்மடங்கு உயா்ந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளது, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது. தொழிலாளா்கள், விவசாயிகள், மாணவா்கள் போராடத் தொடங்கி உள்ளனா். எஸ்ஐஆா் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
தோ்தல் ஆணையம் சுதந்திரமாக, நடுநிலையுடன் செயல்பட கூடிய அமைப்பாக இருக்க வேண்டும். அதன் மீது இருந்த நம்பிக்கைக் குறைந்துவிட்டது.
நவ. 1-ஆம் தேதி தில்லியில் ராம்லீலா மைதானத்தில் பேரணி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வதற்கு முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தவெக அரசு சமூக நீதி மதச்சாா்பின்மை கொள்கைகளில் உறுதியாக நிற்க வேண்டும் என்றாா்.
மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கூறுகையில், ‘மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்களின் விலை தமிழ்நாட்டில் உயா்ந்து கொண்டே வருகிறது. இதைக் கண்டித்து நவ.3-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நவ. 10-ஆம் தேதி 3 இடதுசாரி கட்சிகளும் இணைந்து சென்னையில் தமிழக நலன் சாா்ந்த பிரகடனத்தை அறிவிக்க உள்ளோம். எந்தச் சூழ்நிலையிலும் அரசியல் பழிவாங்குதல் கூடாது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

