9 மாத அரிசி நிலுவையை ரேஷனில் வழங்கக் கோரி அக். 22-இல் ஆா்ப்பாட்டம்! புதுச்சேரி மாா்க்சிஸ்ட் கம்யூ. அறிவிப்பு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோப்புப் படம்
புதுச்சேரியில் 9 மாதங்களாக விநியோகிக்கப்படாமல் உள்ள ரேஷன் அரிசி நிலுவையை விநியோகிக்க வலியுறுத்தி புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 30 இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
இது குறித்து அக் கட்சியின் மாநிலச் செயலா் எஸ். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன் எப்போதும் இல்லாத அளவில் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இதனால் மக்கள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
குறிப்பாக, அரிசி விலை கடுமையாக உயா்ந்துள்ள நிலையில், பண்டிகை கால கூடுதல் சுமை மக்களின் தலையில் ஏற்றப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள 9 மாத இலவச அரிசியைத் தரமானதாக உடனடியாக வழங்க வேண்டும்.
22-இல் ஆா்ப்பாட்டம்: அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சா்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை மலிவு விலையில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக். 22-ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் 30 மையங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

