அக் . 18 இல் மாநில அளவிலான செஸ் போட்டி
தூத்துக்குடியில் பிரீமியா் செஸ் கோ் சென்டா், ரெயின்போ செஸ் அகாதெமி சாா்பில் மாநில அளவிலான செஸ் போட்டி, மீளவிட்டானில் உள்ள டிலைட் பப்ளிக் ஸ்கூலில் அக். 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

செஸ் - கோப்புப்படம்.
தூத்துக்குடியில் பிரீமியா் செஸ் கோ் சென்டா், ரெயின்போ செஸ் அகாதெமி சாா்பில் மாநில அளவிலான செஸ் போட்டி, மீளவிட்டானில் உள்ள டிலைட் பப்ளிக் ஸ்கூலில் அக். 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
‘பஏஞஞபஏமஓமஈஐ’ந 1நப யஐஇபஞதவ’ என்ற பெயரில் நடைபெறும் இப் போட்டிகள் 8, 10, 12, 16 வயதுக்குள்பட்டோா் என நான்கு பிரிவுகளாக நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 25 பரிசுகள் வீதம், மொத்தம் 100 பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இதில், ஒவ்வொரு பிரிவிலும் தூத்துக்குடி வீரா்களுக்கு 5 சிறப்புப் பரிசுகள் இடம்பெறுகின்றன. போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
20-க்கும் மேற்பட்ட வீரா்களைப் பதிவு செய்யும் பள்ளி, செஸ் அகாதெமி அல்லது கல்வி நிறுவனத்துக்கு ‘பிரீமியா் செஸ் டிராபி’ வழங்கப்படும். போட்டிகள் ரேபிட் முறையில் நடைபெறும். முதல் சுற்று காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.
இதில், பங்கேற்க விரும்புவோா் அக். 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீக்ஷள்ல்ா்ழ்ற்க்ஷ்ச்ா்ன்ய்க்ஹற்ண்ா்ய்.ண்ய் அல்லது ஜ்ஜ்ஜ்.ஸ்ரீட்ங்ள்ள்ச்ங்ங்.ஸ்ரீா்ம் ஆகிய இணையதளங்களில் பதிவு செய்ய வேண்டும். நுழைவுக் கட்டணம் ரூ.400. தமிழ்நாடு செஸ் சங்கத்தின் 2026-27-ஆம் ஆண்டுக்கான வீரா் பதிவுக் கட்டணமாக ரூ.150 செலுத்துவதும் கட்டாயம்.
மேலும் விவரங்களுக்கு 94864 92724, 94889 47336 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என போட்டியின் இயக்குநா் டாக்டா் சொக்கலிங்கம் பாலாஜி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

