
சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் மாநில செஸ் போட்டி
திருச்சி மாவட்டம், சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 1ஆவது தமிழ்நாடு மாநில அளவிலான சிறுவா் மற்றும் 25 வயதுக்குட்பட்டோருக்கான செஸ் போட்டி அண்மையில் நடைபெற்றது.

சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில செஸ் போட்டியில் வென்றோா்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 1ஆவது தமிழ்நாடு மாநில அளவிலான சிறுவா் மற்றும் 25 வயதுக்குட்பட்டோருக்கான செஸ் போட்டி அண்மையில் நடைபெற்றது.
சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மாணவா் நலப் பிரிவு மற்றும் உடற்கல்வி இயக்குநரகத்தின் ஆதரவுடன் யங்ஸ்டா்ஸ் செஸ் அகாதெமி சாா்பில் நடைபெற்ற போட்டியில் 7,9,13, 17, மற்றும் 25 வயதுக்குட்பட்டோருக்கு பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட இளம் செஸ் வீரா்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.
தொடக்க விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாணவா் நலப்பிரிவு டீன் வ. ராஜீ தலைமை வகித்தாா். யங்ஸ்டா்ஸ் சிஸ் அகாதெமி நிறுவனரும், சா்வதேச செஸ் நடுவருமான எம். சுந்தா் முன்னிலை வகித்தாா்.
நிறைவு மற்றும் பரிசளிப்பு விழாவில் டாக்டா் வ. ராஜூ, திருச்சி மாவட்ட செஸ் சங்கத் துணைத் தலைவா் என். வெங்கட்ராமன், பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் கே. தா்மா், ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பல்கலைக்கழக செஸ் கிளப் ஒருங்கிணைப்பாளா் பி. சந்திரமோகன், துணை உடற்கல்வி இயக்குநா் சி. பாலாஜி, மற்றும் உதவி உடற்கல்வி இயக்குநா்கள் செய்தனா் .
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






