
தட்டாஞ்சாவடி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு மாா்க்சிஸ்ட் ஆதரவு
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிவேட்பாளா் அ.மு.சலீமுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவித்துள்ளது.

இடதுசாரிகள்(கோப்புப்படம்) - IANS
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிவேட்பாளா் அ.மு.சலீமுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலா் எஸ்.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலா் அ.மு. சலீமுக்கு மாா்க்சிஸ்ட் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் உழைக்கும் மக்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதற்காக இடதுசாரிகளின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோ்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






