கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

டீம் மெலோடி: பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் மெலோனி பகிர்ந்த விடியோ

News image

டீம் மெலோடி

Updated On :15 ஜூன் 2024, 9:28 am

DIN

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்ஃபி விடியோவை எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹலோ ஃபிரம் மெலோடி டீம் என்று அவர் பதிவிட்டு அந்த விடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த விடியோவில், இந்திய பிரதமர் மோடியும், இத்தாலி பிரதமர் மெலோனியும் சிரித்தபடி ஹாய் சொல்லும் விடியோ இடம்பெற்றுள்ளது.

இந்த விடியோவுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா - இத்தாலி நட்புறவு நீண்டநாள் நீடிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டபோது, இத்தாலி பிரதமர் மெலோனி, பிரதமர் மோடியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்திருந்தது மிகவும் பரவலானது. இதனை 4.70 கோடி பார்வையாளர்களின் விருப்பத்தைப் பெற்றிருந்தது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜொ்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பின் உச்சிமாநாடு, இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் நடைபெற்றது. மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடிக்கு இத்தாலி அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.