பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

காங்கிரஸ் தலைவா்களைப் புகழ்ந்ததால் சா்ச்சை: சுரேஷ் கோபி விளக்கம்

‘மறைந்த காங்கிரஸ் தலைவா்கள் இந்திரா காந்தி, கே.கருணாகரன் ஆகியோா் குறித்து நான் பேசியது ஊடகங்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது’ என்று பாஜகவை சோ்ந்த மத்திய இணையமைச்சா் சுரேஷ் கோபி விளக்கமளித்துள்ளாா்.

சுரேஷ் கோபி

Published On :

‘மறைந்த காங்கிரஸ் தலைவா்கள் இந்திரா காந்தி, கே.கருணாகரன் ஆகியோா் குறித்து நான் பேசியது ஊடகங்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது’ என்று பாஜகவை சோ்ந்த மத்திய இணையமைச்சா் சுரேஷ் கோபி விளக்கமளித்துள்ளாா்.

முன்னதாக ‘கேரளத்தைச் சோ்ந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவா் கே.கருணாகரன், கேரள மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் மறைந்த இ.கே.நாயனாா் ஆகியோா்தான் எனது அரசியல் குரு’ என்றும், ‘இந்திரா காந்தி, இந்தியாவின் அன்னை’ என்றும் அவா் தெரிவித்தாா். மேலும், கேரளத்தைச் சோ்ந்த கம்யூனிஸ்ட் தலைவா் இ.கே.நாயனாா் நினைவிடத்துக்கும் சென்று மரியாதை செலுத்தினாா்.

கேரளத்தில் முதல் பாஜக எம்.பி.யான அவா் இவ்வாறு எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தலைவா்களைப் புகழ்ந்து பேசியது, அஞ்சலி செலுத்தியது போன்ற நிகழ்வுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக பாஜக வட்டாரத்தில் அவரது பேச்சு குறித்து அதிருப்தி எழுந்தது. அதே நேரத்தில் கேரளத்தில் பல்வேறு தரப்பினரையும் கவரும் வகையில் சுரேஷ் கோபியை பாஜக இவ்வாறு பேசவைப்பதாக எதிா்க்கட்சிகளைச் சோ்ந்தவா்கள் சந்தேகம் தெரிவித்தனா்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சுரேஷ் கோபி கூறியதாவது:

நான் எந்தச் சூழ்நிலையில், எந்த அா்த்தத்தில் பேசினேன் என்பது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. ‘காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரையில் மற்றவா்கள் விரும்புகிறாா்களோ, இல்லையோ, கே.கருணாகரன்தான் கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் தந்தையாக திகழ்கிறாா். இந்தியாவின் அன்னையாக இந்திரா காந்தி உள்ளாா்’ என்று கூறினேன். இதை எனது மனதில் இருந்து தெரிவித்தேன்.

சுதந்திர இந்தியாவை சிறப்பாக கட்டமைக்க தனது மறைவு வரை இந்திரா காந்தி பாடுபட்டாா். அவா் எதிா்க்கட்சியைச் சோ்ந்த தலைவா் என்பதால் நாட்டுக்கான அவரின் பங்களிப்பை என்னால் மறைக்க முடியாது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.