
கேரள விபத்தில் தமிழக மாணவர்கள் பலி; தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை எச்சரித்துள்ளேன்: சுரேஷ் கோபி
கேரளம் திருச்சூரில் நடைபெற்ற விபத்தில் தமிழக மாணவர்கள் 8 பேர் பலியான சம்பவத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை எச்சரித்துள்ளேன் என சுரேஷ் கோபி பேசியது குறித்து...

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி. - படம் - ஏஎன்ஐ
கேரளம் திருச்சூரில் நடைபெற்ற விபத்தில் தமிழக மாணவர்கள் 8 பேர் பலியான சம்பவத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை எச்சரித்துள்ளேன் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஞாயிற்றுக்கிழமை (செப். 6) தெரிவித்தார்.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே கைப்பமங்கலத்தில் நின்றிருந்த சரக்கு லாரி மீது தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வந்த கார் மோதிய கோர விபத்தில் 8 மாணவர்கள் பலியாகினர்.
இதுகுறித்து சுரேஷ் கோபி பேசியதாவது:
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் பேசினேன். அவர்களை எச்சரித்துள்ளேன். இதிலிருந்து தப்பிக்கும் முயற்சி நடந்துள்ளது.
அந்த நெடுஞ்சாலை உண்மையிலேயே பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டிருந்ததா? ஒரு சாலை பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பதற்குசில நடைமுறைகள் உள்ளன. அந்த இடத்தில் திசை மாற்றுப் பலகையும் முறையாகப் பொருத்தப்படவில்லை.
அந்த லாரி ஓட்டுநர் செய்தது கடுமையான குற்றம். மேலும், மத்திய உள்துறை அமைச்சரிடமும் இதுபற்றி பேசியுள்ளேன். இனிமேல் நெடுஞ்சாலையில் கடுமையான ரோந்துப் பணி மேற்கொள்ளப்படும். போக்குவரத்து குற்றங்களுக்கு ரூ. 25,000 முதல் ரூ. 50,000 வரை அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்தினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுரேஷ் கோபி தெரிவித்தார்.
Thrissur, Keralam | On 8 dead after a car rammed into a parked goods lorry in the district, Union Minister Suresh Gopi says, "I have spoken to the National Highways Authority of India (NHAI) and warned them firmly about the issue... There has been an attempt at escapism... Has⦠https://t.co/4gWK7s9UOg pic.twitter.com/lbmjQagFUL
— ANI (@ANI) September 6, 2026
Summary
Union Minister Suresh Gopi stated on Sunday (Sept. 6) that he has issued a warning to the National Highways Authority regarding the accident in Thrissur, Kerala, in which eight students from Tamil Nadu lost their lives.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






