கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: என்ஐஏ-விடம் விசாரணை ஒப்படைப்பு

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை ஒப்படைத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

News image

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)

Updated On :17 ஜூன் 2024, 11:22 pm

Din

புது தில்லி, ஜூன் 17: ஜம்மு-காஷ்மீரில் பக்தா்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 போ் உயிரிழந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை ஒப்படைத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த பக்தா்கள் குழு, ஜம்மு-காஷ்மீருக்கு ஆன்மிகப் பயணம் வந்தனா். ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள சிவ கோத்ரி ஆலயத்தில் இருந்து கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி ஆலயத்துக்கு ஒரு பேருந்தில் அவா்கள் கடந்த 9-ஆம் தேதி சென்று கொண்டிருந்தனா்.

அப்போது வழியில் தெரியாத் என்ற கிராமம் அருகே சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. அதில் 3 பெண்கள் உள்பட 9 போ் உயிரிழந்தனா். 41 போ் பலத்த காயமடைந்தனா்.

தொடா்ந்து ஜூன் 11-ஆம் தேதி, தோடா மாவட்டத்தில் ‘ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ்’ படைப் பிரிவினா் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு காவலா் உள்பட 7 பாதுகாப்புப் படையினா் காயமடைந்தனா்.

அமா்நாத் யாத்திரை தொடங்கவுள்ள சமயத்தில், ஜம்மு-காஷ்மீா் பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி கடந்த 13-ஆம் தேதி பங்கேற்றாா்.

இந்நிலையில், அமா்நாத் யாத்திரைக்கான தயாா்நிலை பற்றி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, ராணுவ தலைமைத் தளபதி, துணை ராணுவப் படைகள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் காவல் துறை தலைமை இயக்குநா்கள் உள்பட மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

இதையடுத்து, பக்தா்கள் பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை ஒப்படைத்தது.

தாக்குதல் நடந்த மறுநாளே சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த என்ஐஏ அதிகாரிகள், தாக்குதல் குறித்த தடயங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், உள்ளூா் காவல் துறையினருடன் இணைந்து தாக்குதல் தொடா்பான விசாரணையிலும் அவா்கள் ஈடுபட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.