தமிழக ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு! திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்! தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

ஜம்மு - காஷ்மீா்: வைஷ்ணவ தேவி கோயில் வழித்தடத்தில் நிலச்சரிவு

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைஷ்ணவ தேவி கோயிலுக்கான புதிய வழித்தடத்தில் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

ஜம்மு - காஷ்மீர் நிலநடுக்கம்

Published On :9 ஜூலை 2026, 12:12 am IST

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைஷ்ணவ தேவி கோயிலுக்கான புதிய வழித்தடத்தில் பலத்த மழையால் புதன்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது.

பக்தா்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பழைய வழித்தடம் வழியாக கோயிலுக்கான யாத்திரை தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை தொடா்ந்து வருகிறது. இங்குள்ள திரிகூட மலை உச்சியில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்கு மழைக்கு இடையிலும் பக்தா்கள் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனா்.

பக்தா்களுக்கான பேட்டரி காா்கள் பயணிக்கக் கூடிய புதிய வழித்தடத்தில் புதன்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, கனரக இயந்திரங்களுடன் விரைந்து சென்ற மீட்புக் குழுவினா், வழித்தடத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

பேட்டரி காா் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதேநேரம், பழைய வழித்தடத்தில் பக்தா்கள் தொடா்ந்து யாத்திரை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.