காங்கிரஸ் தலைவரின் கால்களைக் கழுவிய தொண்டர்: பரவி வரும் அதிர்ச்சி விடியோ!

மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோலே தனது கால்களை தொண்டரை விட்டு கழுவச் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி விமர்சிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் தலைவரின் கால்களைக் கழுவிய தொண்டர்: பரவி வரும் அதிர்ச்சி விடியோ!

மகராஷ்டிரா காங்கிரஸ் தலைவரான நானா படோலே, சேற்றில் பட்ட தன் கால்களை் தொண்டர் ஒருவரை விட்டு கழுவச் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அகோலா மாவட்டத்தின் வாட்கான் பகுதியில் நடைபெற்ற கட்சி விழாவுக்குச் சென்ற படோலே, அதற்கருகில் நடந்த ஸ்ரீ கஜானன் மகாராஜின் பல்லக்கு ஊர்வலத்தைக் காணச் சென்றார். அந்தப் பகுதி முழுக்க மழை பெய்து சேறும் சகதியுமாக இருந்துள்ளது.

நானா படோலே
நானா படோலே

அவர் வாகனத்துக்குத் திரும்பி வருகையில், படோலின் கால்கள் முழுக்க சேறு ஒட்டியிருந்ததால், அதனைக் கழுவ அவர் தண்ணீர் கேட்டிருக்கிறார். தண்ணீரைக் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர் விஜய் குரவ், சேறு பட்டிருந்த படோலேவின் கால்களைத் தனது கைகளால் கழுவியிருக்கிறார். படோலேவும், அவர் கழுவியதற்கு ஆட்சேபம் தெரிவிக்காமல் தானும் கைகளால் கழுவாமல் இருந்துள்ளார். இவை அனைத்தும் காணொளியில் பதிவாகியுள்ளது.

அந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பரவியதால் நானா படோலே அனைவராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இதனைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய பாஜக செய்தித்தொடர்பாளர் ஷேஷாத் பூனாவாலா, “காங்கிரஸ் கட்சி நவாப் கால நிலப்பிரபுத்துவ இளவரசர் மனப்பான்மையில் உள்ளது. படோலின் கால்களைத் தொண்டரை விட்டுக் கழுவ விடுவது, காங்கிரஸ் தனது தொண்டர்களை சேவகர்கள் போலவும் தங்களை அரசர், அரசியர் போலவும் நினைப்பதாகத் தெரிகிறது.

இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களை எப்படி நடத்துவார்கள் என்று நினைத்துப் பாருங்கள்? நானா படோலேவும், காங்கிரஸும் இதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவரின் கால்களைக் கழுவிய தொண்டர்: பரவி வரும் அதிர்ச்சி விடியோ!
சமணர் சிலைகளை அகற்றிய இடத்திலேயே வைக்க குஜராத் அரசு உத்தரவு!

இந்த விவகாரம் குறித்துப் பேசிய நானா படோலே,”நான் விவசாயக் குடும்பத்தில் இருந்து வருகிறேன். என் கால்களில் சேறும் சகதியும் படுவது புதிதில்லை. நான் என் கால்களில் சேறு பட்டதால் என் தொண்டரிடம் தண்ணீர் கொண்டு வருமாறு கூறினேன். அவரிடம் தண்ணீரை ஊற்றச் சொல்லி நானே என் கால்களைக் கழுவினேன். இந்த விஷயம் தேவையில்லாமல் ஊதிப் பெரிதாக்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.

படோலே இவ்வாறு கூறிய போதிலும், அந்தக் காணொளியில் அவரது கால்களைத் தொண்டர் தனது கைகளால் கழுவுவதுத் தெளிவாகப் பதிவாகியுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com