ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வட மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான ரெட் அலர்ட்!

வட மாநிலங்களில் அடுத்த சில நாள்களுக்கு வெயில் வாட்டிஎடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :18 ஜூன் 2024, 9:53 am

DIN

வட மாநிலங்களில் அடுத்த சில நாள்களுக்கு வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. மாதத்தின் தொடக்கத்தில் வெப்பம் மேலும் அதிகரித்து நகரத்தின் பெரும்பாலான இடங்களில் அதிபட்ச வெப்பநிலையாக 50 டிகிரி செல்சியஸை நெருங்கியிருந்தது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிா்கொள்ள நேரிட்டது.

இந்த நிலையில், தில்லியில் இன்று(ஜூன் 18) 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில், நாளை மேலும் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் தில்லி மற்றும் உத்தரப் பிரதேசத்துக்கு நாளை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், தில்லி மற்றும் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், பிகார் மற்றும் ஜார்க்கண்டின் சில பகுதிகளிலும் வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 27ஆம் தேதிக்குப் பிறகு வடமாநிலங்களில் வெப்ப அலை குறையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.