
செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைதராபாத் விரைவு ரயிலின் இரண்டு காலி பெட்டிகளில் இன்று தீப்பிடித்து எரிந்தன.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என தீயணைப்பு நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செகந்திராபாத் தீயணைப்பு நிலைய அதிகாரி டி.மோகன் ராவ் கூறுகையில், "இன்று காலை 10.50 மணியளவில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைதராபத் ரயிலில் உள்ள பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அழைப்பு வந்தது.
5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.