காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

போரை நிறுத்தும் மோடியால் நீட் முறைகேட்டை தடுக்க முடியவில்லை: ராகுல்

நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை பிரதமர் மோடியால் தடுக்க முடியாதா என ராகுல் கேள்வி

News image
ராகுல் காந்தி- படம் | ஏஎன்ஐ
Updated On :20 ஜூன் 2024, 10:53 am

DIN

புது தில்லி: நீட் தேர்வு முறைகேடு மற்றும் யுஜிசி நடத்தும் நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது ஆகியவற்றை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல், பிரதமர் நரேந்திர மோடி, உளவியல் ரீதியாக பலவீனமடைந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கல்வி மையங்கள் அனைத்தும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அவை மீட்கப்படும்வரை, வினாத்தாள் கசிவு தடுக்கப்படாது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், உக்ரைன் - ரஷியா, இஸ்ரேல் - காஸா நாடுகளுக்கு இடையேயான போரை பிரதமர் நரேந்திர மோடி தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், நீட் வினாத்தாள் கசிவதை பிரதமர் மோடியால் தடுக்க முடியவில்லையா அல்லது அவர் அதனை விரும்பவில்லை? என்றும் ராகுல் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பாரத ஒற்றுமை நடைப்பயணத்தின்போது பலரும் இந்த தேர்வு முறைகேடுகள் குறித்து புகார் அளித்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் வியாபம் தேர்வு மற்றும் ஆள்சேர்ப்பு ஊழல் பற்றிக் குறிப்பிட்ட ராகுல், வியாபம் ஊழல், நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று நீட் முறைகேடு சர்ச்சையைப் பற்றி கூறியுள்ளார். எதையும் தன்னிச்சையாக செய்யக்கூடாது, ஒரு தாளுக்கு பொருந்தும் விதிகள் மற்றொன்றுக்கு பொருந்தும். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்றார் ராகுல் காந்தி.

தற்போது நீட் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது என்றும், மத்திய கல்வித் துறை அமைச்சகம் நெட் தேர்வினை ரத்து செய்து உத்தரவிட்டு, இது தொடர்பாக விசாரிக்க சிபிஐக்கும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.