பிகாரில் சிவான் அருகே மற்றொரு பாலம் உடைந்தது!
பிகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது, 2 ஆண்டுகளில் ஐந்தாவது சம்பவம்


பிகார் மாநிலம் அராரியா அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு, பாலம் ஒன்று இடிந்து விழுந்த நிலையில், இன்று சிவான் அருகே மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.
பிகார் மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது பாலம் இடிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராம்கார் கால்வாய் மீது கட்டப்பட்டிருந்த 100 மீட்டர் பாலம் இடிந்து விழுந்ததாகவும், இது கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆவதாகவும், பாலத்தின் ஒரு பகுதியை தாங்கி நின்றிருந்த தூண் பலமிழந்ததால் இந்த சம்பவம் நேரிட்டதாகவும் சிவான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அண்மையில், இந்த கால்வாய் தூர்வாரப்பட்ட நிலையில், அதன் தூண் பலவீனமடைந்து, பாலம் இடிந்து விழுந்துள்ளதால், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 18ஆம் தேதி அராரியா பகுதியில் சிக்தி என்ற இடத்தில் இருந்த 182 மீட்டர் பாலம் இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மத்திய அரசால் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருந்த நிலையிலேயே பாலம் இடிந்து விழுந்தது. பாலம் கட்டி முடிக்கப்பட்டு, அதற்கு அணுகு சாலைகள் ஏற்படுத்தப்படாமல் இருந்ததால், பாலம் திறக்கப்படுவது தள்ளிப்போன நிலையில், பாலம் திறக்கப்பட்ட பிறகு விபத்து நேரிட்டிருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.
கடந்த மார்ச் மாதம், கோசி ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த ஆற்றுப் பாலத்தின் மூன்று ஸ்லாப்கள் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். எட்டு பேர் காயமடைந்தனர். இதுபோல கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பிகாரில் ஐந்து பாலங்கள் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டிருப்பது கடும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...